ஷாருக்கானின் ‘ஜவான்’ புரமோ வீடியோ.. அட்லி கலக்கல்..!

திங்கள், 10 ஜூலை 2023 (11:00 IST)
இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் இரண்டு நிமிட புரொமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
இதில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர்களின் அட்டகாசமான காட்சிகள் உள்ளன. அனிருத்தின் ஆக்ரோஷமான பின்னணி இசையில் உருவாகிய இந்த புரமோ வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழில் விஜய்யை வைத்து மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி, ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தையும் வெற்றி படமாக மாற்றுவார் என்பது இந்த வீடியோவிலிருந்து தெரிய வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்