மெர்சலுக்கே இப்படின்னா 'காலா' வந்தா காலியாகிவிடுவீர்கள்: ரஞ்சித்

Webdunia
ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (19:15 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த வசனங்கள் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் படக்குழுவினர்களுக்கு பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும், ஒட்டுமொத்த திரையுலகமும் ஆதரவு தெரிவித்துள்ளன.



 
 
இந்த நிலையில் 'கபாலி' இயக்குனர் ரஞ்சித் இதுகுறித்து தெரிவித்தபோது, 'மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி வசனமும் சரி மற்ற வசனங்களும் சரி, மக்களின் கருத்துக்களைத்தான் பிரதிபலித்துள்ளது. அந்த வழனங்அக்ளை நீக்க வேண்டிய அவசியமில்லை' என்று கூறினார்
 
மேலும் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஒருசில வசனங்களுக்கே கொதிக்கும் அரசியல்வாதிகள் 'காலா' படத்தை பார்த்தால் காலியாகிவிடுவார்கள்' என்று தெரிவித்துள்ளார். எனவே 'காலா' படத்தில் அரசியல் நெடி அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்