பாக்யராஜிடம் உதவியாளராக இருந்த மதுராஜ் இயக்கியுள்ள படம் ‘தொட்ரா’. பிருத்வி பாண்டியராஜன் ஹீரோவாக நடிக்க, வீணா என்ற புதுமுகம் ஹீரோயினாக நடித்துள்ளார். காதலை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றபோது, ஹீரோயினை அறைந்து விட்டாராம் இயக்குநர். “மலையாளத்தில் இருந்து ஹீரோயின் வீணாவை அழைத்து வந்திருக்கிறோம். ஒருநாள் சீரியஸான காட்சி ஒன்றைப் படமாக்கிக் கொண்டிருந்தோம். ஆனால், அதன் சீரியஸ்னஸ் புரியாமல் அவர் சிரித்துக் கொண்டே இருந்ததால், 30 டேக் வரை போனது. அதனால், கோபத்தில் அடித்துவிட்டேன். மற்றபடி நன்றாகவே நடித்திருக்கிறார் வீணா” என்கிறார் இயக்குநர் மதுராஜ்.