தமிழ் சினிமாவில் மூடர்கூடம் படம் மூலமாக தன்னுடைய முத்திரையைப் பதித்தவர் இயக்குனர் நவீன். அதையடுத்து அவர் இப்போது அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் அக்னி சிறகுகள் படத்தை இயக்கி வருகிறார். இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த இவர் கடவுள் மறுப்புக் கொள்கைகளையும் பகுத்தறிவுக் கருத்துகளையும் பேசி வருகிறார்.
இந்நிலையில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்திருப்பது குறித்து பேசியுள்ள நஸ்ருதீன் ஷா வின் கருத்தைப் பகிர்ந்த அவர் மேலும் மதம் வேறு, மத அடிப்படைவாதம் வேறு. மதம் தனிமனித நம்பிக்கை. மத அடிப்படைவாதம் என்பது ஒரு சிறு கூட்டம் ஒரு பெருங்கூட்டத்தை அவர்களின் உரிமைகளை மறுத்து கட்டுப்படுத்துவது. அங்கு தனிமனித சுதந்திரம் பரிக்கப் படுகிறது. சர்வாதிகாரம் பிறக்கிறது. மத அடிப்படைவாதிகள் எதிர்க்கப்பட வேண்டியவர்கள்! எனக் கூறியுள்ளார்.