என்னை விட்டால் போதுமென்று இந்தி சினிமாவில் இருந்து ஓடிவந்தேன்… கௌதம் மேனன் பகிர்ந்த தகவல்!

vinoth

வெள்ளி, 22 மார்ச் 2024 (12:47 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் ட்ரண்ட் செட்டிங் படங்களாக அமைந்தன. கடைசியாக அவர் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் சிக்கலில் மாட்டித் தவிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸுக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

கௌதம் மேனன் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் படம் இயக்கியுள்ளார். இந்தியில் மின்னலே படத்தின் ரீமேக் மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக் ஆகியவற்றை இயக்கினார்.

இந்தி சினிமாவில் பணியாற்றியது குறித்து பேசியுள்ள கௌதம் “மின்னலே படத்தை இந்தியில் இயக்க எனக்கு உடன்பாடே இல்லை. ஆனால் மாதவன் வற்புறுத்தலால் இயக்க ஒப்புக்கொண்டேன். அந்த படத்தின் தயாரிப்பாளர் படத்தில் இல்லாத 6 பாடல்களை அவரே வெளிநாட்டுக்கு சென்று படமாக்கினார். எனக்கு அதெல்லாம் பிடிக்கவேயில்லை. ஆளைவிட்டால் போதுமென்றுதான் ஓடிவந்தேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்