மீண்டும் தாமதம் ஆகும் தேசிங் பெரியசாமி படம்… துபாய் பறந்த சிம்பு!

vinoth

செவ்வாய், 12 மார்ச் 2024 (09:46 IST)
பத்து தல படத்துக்குப் பிறகு சிம்பு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் மட்டுமே இதுவரை ரிலீஸானது. படத்தின் ஷூட்டிங் தொடங்குவதாக தெரியவில்லை.

படத்துக்கான முன்தயாரிப்புப் பணிகள் முடிய அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுவதாக சொல்லப்படுகிறது. அதனால் காத்திருந்து கடுப்பான சிம்பு மீண்டும் இப்போது துபாய்க்கு சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் ஷூட்டிங் தொடங்குவதில் இன்னும் தாமதம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்