நடிகை அதுல்யா ரவி மீது என் பெயர் ஆனந்தன் படக்குழுவினர் புகார் அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அதுல்யா ரவி குறுகியகாலகட்டத்தில்டப்ஸ்மாஷ், குறும்படம்ஆகியவற்றில்நடித்துபெரியஹீரோங்களுக்குஈடாகபிரபலமானவர்நடிகைஅதுல்யாரவி. அவர்நடித்தபலகுறும்படங்கள்ரசிகர்களிடையேநல்லவரவேற்பைபெற்றதால்இயக்குனர்சமுத்திரக்கனிநடித்த "ஏமாளி" படத்தில்முக்கியகதாபாத்திரம்ஒன்றில்நடிக்கும்வாய்ப்புஅவருக்குகிடைத்தது. அதையடுத்து வெளிவந்த காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பின்னர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய "கேப்மாரி" படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் அவர் நடித்து முடித்துள்ள என் பெயர் ஆனந்தன் படக்குழுவினர் அவர் மேல் புகார் அளித்துள்ளனர். அதில் எங்கள் படத்தில் ஒப்பந்தம் செய்த போது அவர் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடித்திருந்தார். ஆனால் இப்போது சில படங்களில் நடித்து முடித்துள்ளதால் தன்னை பெரிய கதாநாயகியாக நினைத்துக்கொண்டு எங்கள் படத்துக்கு ஒத்துழைப்புக் கொடுக்க மறுக்கிறார் என அந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.