உண்மைக் கதையைதான் வணங்கான் படத்தில் படமாக்கியுள்ளேன்.. இயக்குனர் பாலா பதில்!

vinoth

செவ்வாய், 21 ஜனவரி 2025 (09:48 IST)
கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் பாலாவுக்கு அவரது திரையுலக வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. அவர் இயக்கிய வர்மா திரைப்படம் திருப்திகரமாக இல்லை எனக் கூறப்பட்டு வேறொரு இயக்குனரை வைத்து மீண்டும் இயக்கி வெளியிட்டார்கள். அதன் பின்னர் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகிக் கொள்ள அதுவும் அடுத்த அடியாக அமைந்தது.

அதன்  பின்னர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்தர். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில், ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடித்தனர். இந்த  படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரிக்க படம் கடந்த 10 ஆம் தேதி கலவையான விமர்சனங்களையும் வணிக வெற்றியையும் பெற்றுள்ளது.

படத்தில் மாற்றுத் திறனாளிகள் மீதான பாலியல் அத்துமீறல் பற்றி பேசியுள்ள இயக்குனர், பாலியல் குற்றவாளிகளைக் கதாநாயகன் கொடூரமாகக் கொல்வது போலவும் அதனை நீதிமன்றமே சரியென்று ஏற்றுக் கொள்வது போலவும் காட்சிகள் அமைந்துள்ளன.

இதுபற்றிய விமர்சனங்களுக்கு இயக்குனர் பாலா தன்னுடைய பதிலை அளித்துள்ளார். அதில் “இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு படத்தில் காட்டப்படுவதை விட கொடூரமான தண்டனைக் கொடுக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இது சென்னையில் உண்மையிலேயே ஒரு பள்ளியில் நடந்த சம்பவத்தை ஒட்டி உருவாக்கியக் கதை. அது எந்த பள்ளிக்கூடம் என்று நான் சொல்ல மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்