கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், நேற்று தண்டனை விவரம் வெளியானது. குற்றவாளி சஞ்சய் ராவுக்கு, சாகும்வரை சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தண்டனை சரியானது அல்ல என்றும், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும், மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில், "இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்," என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாலாஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு, மாநில காவல்துறையிடமிருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கி சிபிஐக்கு ஒப்படைக்கப்பட்டது. "நாங்கள் விசாரணை செய்திருந்தால், குற்றவாளிக்கு அதிகபட்சமாக மரண தண்டனை உறுதி செய்திருப்போம்," என அவர் கூறியுள்ளார்.