இயக்குனர் மாரி செல்வராஜுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (07:51 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இயக்குனர் மற்றும் எழுத்தாளர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளார். இதையடுத்து அவர் இயக்கும் கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாரி செல்வராஜுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அவர் மனைவி திவ்யா இன்று காலை ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். குழந்தையைக் கையில் ஏந்தி இருக்கும் மாரி செல்வராஜின் புகைப்படம் இணையத்தில் வெளியாக, அவருக்குப் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்