மதகஜராஜா மாதிரி துருவ நட்சத்திரமும் ஒருநாள் வரும்! - கௌதம் மேனன் கொடுத்த அப்டேட்!

Prasanth Karthick
ஞாயிறு, 19 ஜனவரி 2025 (16:07 IST)

தற்போது மதகஜராஜா திரையரங்குகளில் வெளியாகி ஹிட்டாகியுள்ள நிலையில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரமும் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என கௌதம் மேனன் கூறியுள்ளார்.

 

 

13 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்து தயாரான படம் மதகஜராஜா. பல பிரச்சினைகளால் கடந்த 13 ஆண்டுகளாக இந்த படத்தை ரிலீஸ் செய்யவே முடியாமல் இருந்த நிலையில் இந்த பொங்கலுக்கு படம் வெளியானது. நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் நன்றாக ஓடி வருகிறது.

 

தமிழில் இதுபோலவே ரிலீஸுக்கு தயாராகி நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் மற்றொரு படம் துருவ நட்சத்திரம். கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த இந்த படம் 2018 முதலாக பல முறை ரிலீஸ் செய்ய முயற்சி செய்யப்பட்டு ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. இந்த துருவ நட்சத்திரம் ரிலீஸுக்கும் ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

 

இந்நிலையில் துருவ நட்சத்திரம் ரிலீஸ் குறித்து பேசிய கௌதம் மேனன் “மதகஜராஜா இப்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதை பார்த்து நான் மேலும் இன்ஸ்பையர் ஆகிவிட்டேன். துருவ நட்சத்திரம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும். இது இப்போது ரிலீஸானால் கூட 2018ல் எடுத்த படம் போல இருக்காது. போன வாரம் எடுத்த படம் மாதிரிதான் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்