பிரபல தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!

vinoth

வியாழன், 17 அக்டோபர் 2024 (09:38 IST)
நடிகர் விக்ரம்மின் மகனான துருவ் ஆதித்யா வர்மா மற்றும் மகான் ஆகிய இரு படங்களில் நடித்து நல்ல அறிமுகத்தைப் பெற்றார். ஆனால் அந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய ஹிட்டடிக்கவில்லை. தொடர்ந்து படங்களில் நடிக்காமல் துருவ் மிகப்பெரிய இடைவெளியை எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் இப்போது அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன் –காளமாடன்” என்ற படத்தில் கபடி வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதையடுத்து துருவ் விக்ரம் நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தை RX 100 மற்றும் மஹாசமுத்திரம் ஆகிய படங்களை இயக்கிய அஜய் பூபதி இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பைசன் படத்தை துருவ் விக்ரம் முடித்தவுடன் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்