‘கில்’ திரைப்படத்தின் ரீமேக்கில் துருவ் விக்ரம்?

vinoth

திங்கள், 19 மே 2025 (08:48 IST)
நடிகர் விக்ரம்மின் மகனான துருவ் ஆதித்யா வர்மா மற்றும் மகான் ஆகிய இரு படங்களில் நடித்து நல்ல அறிமுகத்தைப் பெற்றார். ஆனால் அந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய ஹிட்டடிக்கவில்லை. தொடர்ந்து படங்களில் நடிக்காமல் துருவ் மிகப்பெரிய இடைவெளியை எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் இப்போது அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன் –காளமாடன்” என்ற படத்தில் கபடி வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் தீபாவளிக்குப் படம் ரிலீஸாகிறது.

இதையடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சொல்லப்படும் நிலையில் கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி ஹிட்டான ‘கில்’ படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கில் படம் அதன் அதீத மற்றும் குரூரமான வன்முறைக் காரணமாக கொண்டாடப்பட்ட வேளையில் விமர்சனங்களையும் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்