தனுஷின் 'கேப்டன் மில்லர்' பட அப்டேட்

வெள்ளி, 29 டிசம்பர் 2023 (19:18 IST)
நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் சென்சார் சான்றிதழ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். இவர்  நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’.

இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.  தனுஷிடன் இணைந்து சிவராஜ்குமார், சந்திப் கிசான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து.

ஏற்கனவே இப்பட முதல் சிங்கில் ரிலீஸான நிலையில், சமீபத்தில் கபீர் வாசுகி பாடல் வரிகளின், ஜிவி பிரகாஷ் இசையில்  சீன் ரோல்டன் குரலில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த  நிலையில், இப்படத்தின் சென்சார் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன் மில்லர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

U/A certificate #CaptainMiller

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்