கார்த்திக் சுப்பராஜ் படத்தின் டீஸரை வெளியிடும் தனுஷ்

Webdunia
திங்கள், 31 ஜூலை 2017 (14:54 IST)
கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ள படத்தின் டீஸரை, இன்று மாலை வெளியிடுகிறார் தனுஷ்.


 

 
கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மேயாத மான்’. ரத்னகுமார் இயக்கியுள்ள இந்தப் படம், அவரே இயக்கிய ‘மது’ என்ற குறும்படத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. வைபவ், பிரியா பவானிசங்கர் இருவரும் ஹீரோ – ஹீரோயினாக நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன், பிரதீப் குமார் இருவரும் இசையமைத்துள்ளனர்.
 
இதுதான் கார்த்திக் சுப்பராஜ் முதன்முதலாகத் தயாரித்துள்ள படம். இதன் டீஸர், இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருக்கிறது. அதை, தனுஷ் வெளியிட உள்ளார். கால்ஷீட் தருவதாக கார்த்திக் சுப்பராஜைக் காக்க வைத்து, கடைசிவரை கால்ஷீட்டே தராமல் ஏமாற்றியவர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்