மஹிந்திரா கம்பெனி ஓனருக்கு சூப்பர் ஸ்டார் கொடுக்கும் பரிசு

Webdunia
திங்கள், 29 மே 2017 (23:54 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா கரிகாலன்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்தது. இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு ஜீப் மீது உட்கார்ந்திருப்பார்



 


இந்த ஜீப் மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடல். இதை அறிந்தவுடன் இந்த கம்பெனியின் ஓனர் ஆனந்த் மஹிந்திரா என்பவர் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அந்த ஜீப்பை என்னிடம் கொடுங்கள். அதை விலைக்கு வாங்கி ஆட்டோமொபைல் கண்காட்சியில் வைப்பேன் என்று கூறினார்

மேலும் ஒரு மிகப்பெரிய கலைஞர் பயன்படுத்தியதால் அந்த ஜீப்பும் பெரும் பெருமையை பெற்றது என்று தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள தனுஷ், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அந்த ஜீப் உங்கள் கைக்கு வந்து சேரும்' என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்