அப்துல் கலாம் பயோபிக் படமான ‘கலாம்’-ல் கதாநாயகனாக தனுஷ்… கேன்ஸ் விழாவில் வெளியான முதல் லுக் போஸ்டர்!

vinoth

வியாழன், 22 மே 2025 (07:59 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சினிமா என பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் தனுஷ். அவர் நடிப்பில் ‘குபேரா’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ளன. இதையடுத்து அவர் நடிப்பில் ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் உருவாக்கத்தில் உள்ளன.

இந்நிலையில் தனுஷ் அடுத்து அனு விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.

இந்த படத்தை ‘ஆதிபுருஷ்’ படத்தை இயக்கிய ஓம் ராவத் இயக்கவுள்ளார். முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டாலும் படத்தின் ஷூட்டிங் தொடங்க ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும் என சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்