ஒரு படம் எடுக்க ஆன செலவை, ஒரு ஷெட்யூலுக்கே தனுஷ் செலவழித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி நடிக்கும் படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தக் கதையின் முதல் பாகத்தை, அடுத்த கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
தனுஷ் இதுவரை நடித்த படங்களிலேயே, இந்தப் படத்துக்குத்தான் அதிக பட்ஜெட் என்கிறார்கள். மூன்று பாகமாக எடுப்பதால் செலவு அதிகமாக இருக்கும் என்கிறீர்களா? அதுதான் இல்லை. ‘விசாரணை’ படத்துக்காக செலவழித்த ஒட்டுமொத்தத் தொகையையும், இந்தப் படத்தின் ஒரு ஷெட்யூலுக்கே செலவழித்திருக்கிறார்களாம். அப்படியானால், கூட்டிக் கழித்துப் பாருங்கள்… என்ன, தலை சுற்றுகிறதா?
இந்தப் படத்தை தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம், லைக்கா நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கிறது.