ஜூலையில் தனுஷின் இரண்டு படங்கள்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (09:43 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் இரண்டு படங்கள் ஜூலை மாதத்தில் ரிலீஸ் ஆக உள்ளன.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். ஏற்கனவே சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் என அடுத்தடுத்து நடந்த படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறைவுற்றது.

இதையடுத்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் படம் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸாகும் என படத்தை வாங்கியுள்ள உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜூலை 22 ஆம் தேதி தனுஷ் நடித்துள்ள முதல் ஹாலிவுட் படமான ‘தி க்ரே மேன்’ திரைப்படமும் நெட்பிளிக்ஸில் நேரடியாக ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்