மூடப்படுகிறதா வுண்டர்பார் நிறுவனம் ? – தனுஷ் அப்செட் !

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (12:03 IST)
தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் கடுமையான நஷ்டத்தின் காரணமாக மூடப்படப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தனுஷ் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளாகப் படங்களைத் தயாரித்து வருகிறார். மிகக்குறைந்த காலத்திலேயே இந்நிறுவனத்தின் மூலம் சுமார் 20 படங்களைத் தயாரித்துள்ளார். இதில் ரஜினியின் காலா படமும் அடக்கம்.

ஆனால் தனுஷ் ஒரு வெற்றி பெற்ற நடிகராக வந்தது போல அவரது தயாரிப்பு நிறுவனம் வெற்றிகரமாக வளரவில்லையாம். தனுஷ் தயாரித்த சிலப் படங்கள் பெரியளவில் நஷ்டத்தை அளித்ததும் மற்றும் அந்நிறுவனத்தில் தனுஷின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கிய சில நிர்வாகிகள் கணக்கு வழக்குகளில் கையாடல் செய்துள்ளதாலும் தனுஷ் பயங்கர அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் இதுநாள் வரைக் கணக்கு வழக்குகளில் அதிகமாக ஆர்வம் காட்டாத தனுஷ் இப்போது அனைத்து விவரங்களையும் ஆராய்ந்து பார்த்ததும் அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இவ்வளவு நஷ்டத்தோடு இந்தத் தயாரிப்பு நிறுவனம் மேலும் இயங்கவேண்டாம் என முடிவெடுத்து கூடிய விரைவில் கம்பெனியை மூட இருக்கிறாராம். இதனால் இனிமேல் தனுஷ் வெளிக்கம்பெனிகளிக்கு மட்டுமே இனிமேல் படங்களை ஒத்துக்கொண்டு நடிப்பார் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்