இயக்குனர் எம்.ராஜேஷ் படத்தில் இணைந்த தனுஷ்: ஆச்சரிய அறிவிப்பு

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (22:05 IST)
இயக்குனர் எம்.ராஜேஷ் படத்தில் இணைந்த தனுஷ்: ஆச்சரிய அறிவிப்பு
இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் தனுஷ் இணைந்துள்ளது கோலிவுட் திரையுலகில் ஆச்சரியத்தை அளித்துள்ளது 
 
இயக்குனர் ராஜேஷ் இயக்கிய மிஸ்டர் லோக்கல் என்ற படத்தை அடுத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரே இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ளார்
 
சன் என்டர்டைன்மென்ட் நிறுவனத்திற்காக தயாரிக்கும் இந்த படத்தில் ஒரு பாடலை தனுஷ் பாட உள்ளதாக ஜீவி பிரகாஷ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இந்த ஆண்டு தான் கம்போஸ் செய்யும் முதல் பாடல் இது என்றும் இந்த பாடலை தனுஷ் பாட இருப்பதாகவும் கானா வினோத் என்பவர் எழுதி இருப்பதாகவும் இந்த பாடல் டாட்டா பை பை பை என்று தொடங்கும் பாடல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
மேலும் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் எம். ராஜேஷ் படத்தில் தனுஷ் முதல் முதலாக பாட இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்