இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்திருந்த நேர்காணலில் தனுஷ் அப்போது எனக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். அவரிடம் உன்னை சரணடைந்தேன் படத்தை போட்டுக் காட்டினேன். அந்த படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனால் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கக் கேட்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். ஒரு ரசிகனாக எனக்கு அந்த படம் பிடிக்கும். ஆனால் இதுபோன்ற கதைக்களன் எனக்கு செட்டாகாது என மறுத்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.