புதுச்சேரியில் முகாமிடும் தனுஷ் படக்குழு!

செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (10:16 IST)
நடிகர் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடக்க உள்ளது.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிப்பதாக அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது.

இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் மூன்றாம் தேதி புதுச்சேரியில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்