தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிப்பதாக அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
நடிகை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பில் இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது