இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மருத்துவமனை அவருடைய உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக முன்னேறி வருவதாகவும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் பாரதிராஜாவுக்கு தற்போது சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து தற்போது அவரைப் பார்க்க வெளியாட்களை மருத்துவமனை நிர்வாகம் அனுமதித்து வருவதால் நடிகர் தனுஷ் இப்போது மருத்துவமனைக்கே சென்று பாரதிராஜாவை சந்தித்து பேசியுள்ளார்.