இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இல்லாமல் நடந்த அரியவன் படத்தின் இசை வெளியீடு!

புதன், 22 பிப்ரவரி 2023 (15:33 IST)
திருச்சிற்றம்பலம் படத்துக்குப் பிறகு இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அரியவன்.

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் உருவான அரியவன் என்ற படத்தின் போஸ்டர் சமீபத்தில் ரிலீஸானது. இந்த படத்தில் அறிமுக நடிகர்கள் ஈஷான் மற்றும் ப்ரனாலி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை அவர் திருச்சிற்றம்பலம் படத்துக்கு முன்பே இயக்கி முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது திருச்சிற்றம்பலம் ஹிட்டுக்குப் பிறகு இந்த படத்தை அவர் கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் அரியவன் போஸ்டரை தயாரிப்புத் தரப்பு வெளியிட்ட அதே நாளில் மாதவன் நடிப்பில் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். 

இந்நிலையில் இன்று அரியவன் படத்தின் இசை வெளியீடு நடந்துள்ள நிலையில் இதில் கூட இயக்குனர் மித்ரன் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்