ரொம்ப நாளா காத்திருந்த சந்திப்பு… தனுஷ் பகிர்ந்த புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (09:29 IST)
நடிகர் தனுஷ் தன்னுடைய வளர்ப்பு பிராணிகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாறன் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக சமுத்திரக்கனியும் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த படம் வரும் வெள்ளிக்கிழமை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

இதன் ப்ரமோஷன் பணிகளுக்காக நீண்ட நாட்களாக ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த தனுஷ் இப்போது சென்னைக்கு வந்துள்ளார். வாத்தி படத்தின் கெட்டப்பில் அச்சு அசல் டீனேஜ் பையன் போலவே இருக்கும் தனுஷ், பகிர்ந்துள்ள புகைப்படத்தில் அவரைச் சுற்றி அவரின் நான்கு செல்ல நாய்கள் இருக்கின்றன. மேலும் அந்த புகைப்படத்தோடு ‘நீண்ட நாட்களாக காத்திருந்த சந்திப்பு. உங்களோடு இருப்பது மகிழ்ச்சி’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்