‘வடசென்னை’ படத்தில், மூன்று வேடங்களில் நடிக்கிறாராம் தனுஷ்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாக உருவாகிவரும் இந்தப் படத்தின் முதல் பாகமே அடுத்த வருடம்தான் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்தப் படத்தில், தனுஷுக்கு வில்லனாக அமீர் நடிக்கிறார். சமுத்திரக்கனி முக்கியமான கேரக்டரில் நடிக்க, ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில், மூன்று வேடங்களில் நடிக்கிறாராம் தனுஷ். அவர் மட்டுமல்ல. சமுத்திரக்கனி, அமீர் என முக்கிய வேடங்களில் நடிக்கும் எல்லோருமே மூன்று வேடங்களில் நடிக்கிறார்களாம். பாகத்துக்கு ஒரு வேடமா, இல்லை ஒரே பாத்திலேயே மூன்று வேடங்களா என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம். தற்போது ஹாலிவுட் படத்தில் தனுஷும், ‘காலா’வில் சமுத்திரக்கனியும் நடித்து வருகின்றனர்.