வில்லனுக்கு குரல் கொடுத்த தனுஷ்

செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (00:59 IST)
தனுஷ் நடித்த 'மாரி' படத்தில் வில்லனாக அறிமுகமானவர் பிரபல பாடகர் ஜேசுதாசின் மகன் விஜய்ஜேசுதாஸ். இவர் தற்போது 'படைவீரன்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை மணிரத்னம் உதவியாளர் தனா இயக்கி வருகிறார்



 
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாட இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இன்று அந்த பாடலை ஒலிப்பதிவு செய்தார். இந்த பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
விஜய்ஜேசுதாஸ், பாரதிராஜா, அகில், அமிர்தா, மனோஜ்குமார், கவிதாபாரதி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ராஜவேல் மோகன் ஒளிப்பதிவும், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்