ஃபங்க் ஹேர் ஸ்டைலில் வித்யாசமான தனுஷ் - பிறந்தநாள் பார்ட்டி புகைப்படத்தை வெளியிட்ட மனைவி!

செவ்வாய், 28 ஜூலை 2020 (15:52 IST)
தமிழ் சினிமாவில் நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டு சிறந்து விளங்கி வருபவர் நடிகர் தனுஷ். இவர் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார்.

2002ம் ஆண்டு வெளியான இப்படத்தில் அவரது தோற்றம் குறித்தும் , நடிப்பு குறித்தும் அவமதிக்கப்பட்டார். ஆனாலும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து சுள்ளான் , புதுப்பேட்டை , காதல் கொண்டேன், பொல்லாதவன், அசுரன் என பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.

அத்துடன் பாலிவுட்டில் ராஞ்சனா படத்தின் மூலம் அறிமுகமாகி அங்கும் ஹிட் கொடுத்தார். பின்னர் அங்கு தனது இரண்டாவது படமே அமிதாப் பச்சனுடன் " சமிதாப்" என்ற படத்தில் நடித்து புகழ்பெற்றார். தற்ப்போது அத்ரங்கி ரே என்ற இந்தி படத்தில் அக்ஷய் குமாருடன் நடிக்கிறார். இந்த படத்தில் அமீர் கான் மகள் சாரா அலிகான் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படி தொடர்ந்து தனது வளர்ச்சியை திறமையால் அதிகரித்துக்கொண்டிருக்கும் தனுஷ் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் , நண்பர்கள் , திரையுலகினர் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். தற்ப்போது தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராமில் பிறந்தநாள் பார்ட்டி புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனுஷ் பின்னின்று திரும்பியவாறு ஃபங்க் ஹேர் ஸ்டைலில் கெத்தாக இருக்கிறார். இந்த போட்டோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

♥️♥️

A post shared by Aishwaryaa R Dhanush (@aishwaryaa_r_dhanush) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்