தனுஷ் அருண் மாதேஸ்வரன் இணையும் படத்தின் தலைப்பு? முக்கிய வேடத்தில் மலையாள நடிகர்!

திங்கள், 11 ஏப்ரல் 2022 (15:40 IST)
ராக்கி மற்றும் சாணிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்து தனுஷ் ஒரு படம் நடிக்க உள்ளதாக அறிவித்திருந்தார்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. வரும் மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தைப் பற்றிய மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் மலையாள நடிகர் விநாயகம் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்துக்கு கேப்டன் மில்லர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் கதை சுதந்திரத்துக்கு முன்பு நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்