அடுத்தடுத்த வாரங்களில் சிம்பு & தனுஷ்… களைகட்டப்போகும் திரையரங்குகள்!

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (14:26 IST)
தனுஷ் மற்றும் சிம்பு நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் தனுஷ் இதை சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி சிம்பு நடிப்பில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ரிலீஸானால் அடுத்தடுத்த வாரங்களில் சிம்பு & தனுஷ் படங்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்