தனுஷ் 50 படத்தின் ஷூட்டிங் எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்!

புதன், 5 ஜூலை 2023 (07:51 IST)
பவர் பாண்டி படம் மூலம் இயக்குநராக தன்னை நிரூபித்த தனுஷ், அடுத்து தனது 50 ஆவது படத்தை தானே இயக்க உள்ளார். இந்த படத்தில் ஏகப்படட் நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது

இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், திரிஷா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கேப்டன் மில்லர் படம் முடிந்துள்ளதை அடுத்து இந்த படத்தை தனுஷ் உடனடியாக தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்காக மிக பிரம்மாண்டமாக செட் அமைக்க இடம் ஒன்றை தேடி வருவதாக சொல்லப்படுகிறது. அதில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் செட்களாக அமைக்கப்பட்டு பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் சென்னையில் தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்