அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் குட் பேட் அக்லிஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒரு வாரம் மட்டும் ஷூட்டிங் நடக்க வேண்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் என்ற படத்தின் ரீமேக் என தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் டீசரைப் பார்க்கும்போதும் அது உறுதியாகியுள்ளது. ஆனால் இந்த படத்தை முறையான அனுமதி பெறாமல் எடுத்து வருவதாகவும் அது சம்மந்தமாக பேரமவுண்ட் பிக்சர்ஸ் எனும் ஹாலிவுட் ஸ்டுடியோ லைகா நிறுவனத்துக்கு பல கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தற்போது ஒரு தகவல் பரவியது.
இதுபற்றி பேசியுள்ள பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் “விடாமுயற்சி படம் பிரேக்டவுன் படத்தில் இருந்து உந்துதல் பெற்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஷூட்டிங்குக்கு 3 மாதங்களுக்கு முன்பே அவர்கள் ரீமேக் உரிமையைக் கைப்பற்றிவிட்டார்கள். அதனால் ரிலீஸுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. படம் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது” எனக் கூறியுள்ளார்.