இயக்குனர் அவதாரம் எடுக்கும் தேவயானி… இளையராஜா இசையில் முதல் படைப்பு!

vinoth

வெள்ளி, 22 நவம்பர் 2024 (14:27 IST)
தமிழ் சினிமாவில் 90 களின் இறுதியில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. ரஜினி, கமலை தவிர மற்ற எல்லா நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர். அப்போது அவரை வைத்து நீ வருவாய் என மற்றும் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆகிய படங்களை இயக்கிய ராஜகுமாரனை பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். அதனால் பல ஆண்டுகள் அவர்கள் பெற்றோருடன் பேசாமல் வாழ்ந்து வந்தார்.

அதன் பிறகு சினிமாவில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்த நிலையில் சீரியலில் கவனம் செலுத்தினார். அவர் நடித்த கோலங்கள் சீரியல் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதன் பிறகு சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உருவானார்.

இந்நிலையில் இப்போது தேவயானி ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளாராம். அதன் ஷூட்டிங் முடிந்து பின்தயாரிப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த குறும்பத்தை இளையராஜாவிடம் காட்டி இசையமைக்க சொல்லிக் கேட்கவே, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். விரைவில் இந்த குறும்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்