ஒரே நாளில் வகுப்பறைக்குள் ஆசிரியைக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவமும், நீதிமன்றத்திற்கு அருகில் வைத்து வழக்கறிஞர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவமும், பதற்றத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
கடந்தவாரத்தில் மருத்துவர் குத்தப்பட்ட விவகாரம், ரவுடிகள் சேர்ந்து காவலர்களைத் தாக்கிய சம்பவம், நடுரோட்டில் ஓட ஓட பெண்ணை விரட்டிச் சென்று தாக்கும் காட்சிகள் என ஒட்டுமொத்தமாக தமிழகம் வன்முறைக் களமாக மாறி இருப்பதை காட்டுகிறது.
இங்கு எந்தத்துறை ஆனாலும், பொது மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதை அரசும், காவல்துறையும் உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர்கட்சிகளுக்குப் பதில் அளிப்பதும், மத்திய அரசை தாக்கி பேசுவது மட்டும் தான் அரசின் நடவடிக்கை என்ற அளவில் இல்லாமல், நடக்கும் கொலைகளுக்கும், வன்முறைத் தாக்குதல்களுக்கும் முன்விரோதம் காரணம் என்று கூறி அவற்றை நியாயப்படுத்தாமல் மாநிலத்தின் ஆபத்தான நிலையைக் கவனத்தில் கொண்டு வன்முறைகளை களைய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.