நாய் கடித்த மாணவனை தேவயானி காப்பாற்றியது எப்படி?

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (06:01 IST)
பிரபல நடிகையும் இயக்குனர் ராஜகுமாரனின் மனைவியுமான தேவயானி, டிவி சீரியல்களில் பிசியாக இருக்கும் நிலையில் தற்போது மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


 


'மை ஸ்கூல்' என்ற தலைப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் தேவயானி டீச்சர் வேடத்தில் நடிக்கவுள்ளார். பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரை நாய் கடித்து விடுகிறது. அவனை காப்பாற்றுவதற்காக வகுப்பு ஆசிரியை போராடுவதே படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

இந்த படத்தை தவிர தெலுங்கு படம் ஒன்றில் இளம் நாயகி ஒருவருக்கு அக்கா வேடத்தில் நடிக்க தேவயானி ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் ஒரு முன்னணி நடிகரின் தமிழ் படத்திலும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்