பாலிவுட் திரை நட்சத்திரங்களான தீபிகா - ரண்வீர் திருமணம் நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதியில் இத்தாலியில் லேக்கோமா நகரில் உள்ள மிகப்பிரபலமான ஒரு ஹோட்டலில் நடைபெற்றது. கொங்கினி கலாச்சார முறைப்படி முதல்நாளிலும்,அடுத்த நாள் சிந்தி முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. இதில் குடும்ப நண்பர்கள் , உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்நிலையில் புதுமணத்தம்பதிகள் சார்பாக பாலிவுட் பிரபலங்கள், ஊடகவியலாளர்கள், உறவினர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அனுப்பி வைத்துள்ளனர்.