சி ஈ ஓ போல கெத்தான லுக்கில் புகைப்படம் வெளியிட்ட நடிகை ! குவியும் லைக்ஸ்

செவ்வாய், 15 டிசம்பர் 2020 (16:14 IST)
பிரபல சின்னத்திரை நடிகையான திவ்யதர்ஷினி புதிய தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி ரசிகர்களால் டிடி என அழைக்கப்பட்டு வருகிறார். பல்வேறு படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளின் மூலம்தான் பிரபலமானார். ஆனால் சமீபகாலமாக அவர் விஜய் தொலைக்காட்சியில் தலைகாட்டவில்லை.

இந்நிலையில் சமீபகாலமாக சமூகவலைதளங்கள் மூலமாகவே ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். இந்நிலையில் இப்போது காஸ்ட்லி காரில் கம்பெனி சி இ ஓ போல கெத்தாக இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்