வெஸ்ட் இண்டீஸை வொயிட்வாஷ் செய்த நியுசி … ஆனாலும் முதல் இடம் இல்லை – ஐசிசி விளக்கம்!

செவ்வாய், 15 டிசம்பர் 2020 (11:37 IST)
வெஸ்ட் இண்டீஸ் அணியை வொய்ட் வாஷ் செய்ததன் மூலம் நியுசிலாந்து அணி முதல் முதலாக டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்துக்கு வந்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் நியுசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் 116 புள்ளிகளைப் பெற்றது. இதன் மூலம் முதல் இடத்தில் உள்ள ஆஸியுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டது. 100 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றியில் நியுசிலாந்து அணி முதல் இடம் பிடிப்பது இதுவே முதல் முறை.

இந்நிலையில் ஐசிசி தரவரிசையில் நியுசிலாந்துக்கு இரண்டாவது இடமே அளிக்கப்பட்டது. அதுகுறித்த விளக்கம் இப்போது வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவும் நியுசிலாந்தும் 116 புள்ளிகள் பெற்றிருந்தாலும் தசமப் புள்ளிகளில் ஆஸி முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 116.461 புள்ளிகளும், நியூஸிலாந்து அணி 116.375 புள்ளிகளும் பெற்றுள்ளன. இதனால்தான் நியுசி இரண்டாம் இடத்தில் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்