இதை பார்த்தா கல் நெஞ்சக்காரனுக்கும் காதல் வந்திடும் - ரொமான்டிக் மூடிற்கு கூட்டிச்செல்லும் தர்ஷா குப்தா!

புதன், 9 பிப்ரவரி 2022 (17:05 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
 
குறிப்பாக குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோர் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும், புகழ் அருண்விஜய் மற்றும் சந்தானம் படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
அந்தவகையில் விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தர்ஷா குப்தா. அவர் குக் வித் கோமாளி 2ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால், அவர் பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.
 
அதையடுத்து ஹீரோயின் வாய்ப்பு கிடைத்து ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளானார். தொடர்ந்து இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் தர்ஷா குப்தா எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது மன்மதன் படத்தின் ரொமான்டிக் பாடலுக்கு டப்ஷ்மாஸ் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு காதலில் உருகவைத்துள்ளார். இந்த வீடியோவை கண்டு ரசிகர்கள் காதல் ப்ரொபோஸ் கமெண்ட்ஸ்களை குவித்துள்ளனர்.  
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dharsha (@dharshagupta)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்