"நெருப்புப் பேரோட..நீ குடுத்த ஸ்டாரோட" சும்மா கிழித்து தள்ளிய "தர்பார்" பாடல்!

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (17:22 IST)
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டது. 
 
இந்நிலையில் தற்போது தர்பார் படத்தின் "சும்மா கிழி" என்ற பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் சற்றுமுன் யூடியூபில் வெளிவந்துள்ளது. பாடலாசிரியர் விவேக் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை அனிருத் மற்றும் எஸ்.பி பாலசுப்ரமணியம் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலை கேட்டவுடன் ரஜினி அனிருத்தின் கையை பிடித்து யப்பா...சூப்பர்... இந்த பாடல் தியேட்டரில் சும்மா கிழி தான் என கூறுகிறார். தற்போது இந்த பாடலை தலைவர் புள்ளிங்கோ ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்