கெத்தான..ஸ்டைலான தர்பார் - வைரலாகும் ரஜினியின் மாஸ் கெட்டப்!

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (14:51 IST)
சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகிவரும்  தர்பார் படத்தின் ரஜினியின் புதிய கெட்டப் ஒன்று இணயத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. 


 
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான "தர்பார் " படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166வது படமாக உருவாகவிருக்கிறது.   இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்தது. 
 
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது.  ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  பேட்ட படத்தில் ரஜினிக்கு ஆடைவடிவமைப்பாளராக பணியாற்றிய நிஹாரிகா பசின்கான் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார்.


 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்பையில் படுமும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில்அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் , வீடியோக்களும் லீக்காகி இணையத்தில் வைரலாகி வந்ததது. இதனால் படக்குழுவினர் தரப்பில் ஜூனியர் ஆர்டிஸ்ட்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு பாதுகாப்பாக படப்பிடிப்பை நடத்தி வந்தனர். 


 
ஆனால், அதையும் மீறி தற்போது, ரஜினியின் புதிய புகைப்படம் ஒன்றில் இணையத்தில் வெளியாகியுள்ளது.  ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் முருகதாஸுடன் இருக்கும் ரஜினி செம்ம மாஸான ஸ்டைலில் இளமையான தோற்றத்தில் இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி மெகா வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்