மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது முடிந்து, எப்பொழுது திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்படும் என்று என்பது தெரியாமல் பல தயாரிப்பாளர்கள் கவலையில் உள்ளனர். இந்த நிலையில் தயாரிப்பாளர்களுக்கு கைகொடுக்கும் வகையில் ஓடிடி அமைந்துள்ளது. இருப்பினும் ஓடிடி தளத்தில் சில வழிமுறைகளை கடைபிடிக்கப்படாததால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைப்பதில்லை. கிட்டத்தட்ட போட்ட பட்ஜெட் பணம் மட்டுமே திரும்ப கிடைத்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சிவி குமார் அவர்கள் ’ரீகல் டாக்கீஸ்’ என்ற பெயரில் புதிய ஒட்டி தளத்தை உருவாக்கி உள்ளார். இந்த தளத்தில் படம் பார்ப்பவர்கள் ஒவ்வொரு முறையும் ஒரே ஒரு முறை பணம் செலுத்தி அவர்கள் விரும்பும் திரைப்படத்தைப் பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய முயற்சிக்கு திரையுலகினர் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என ஏற்கனவே அவர் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் தற்போது இந்த ரீகல் டாக்கீஸ் ஜூலை எட்டாம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். பழைய திரைப்படங்கள் முதல் புதிய திரைப்படங்கள் வரை இந்த தளத்தில் இடம் பெற்று இருக்கும் என்றும் பார்வையாளர்கள் அதற்குரிய ஒரு சிறிய கட்டணத்தை மட்டும் செலுத்தி ஒரு முறை பார்த்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவி குமாரின் இந்த புதிய முயற்சிக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் உள்பட பலர் தங்களது டுவிட்டர் தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது