கோட் படத்தில் நடித்திருப்பதை உறுதி செய்த கிரிக்கெட் வீரர்!

vinoth

புதன், 4 செப்டம்பர் 2024 (07:45 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக பரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. சமீபத்தில் படம் சென்சார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றது. படத்தின் ஓடும் நேரம் 3 மணிநேரம் 3 நிமிடம் என தெரியவந்துள்ளது. நாளை மறுநாள் படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் படக்குழுவினர்.

படத்தில் ஏகப்பட்ட இன்ப அதிர்ச்சிகள் இருக்கும் என இயக்குனர் வெங்கட்பிரபு கூறியுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தான் ஒரு சிறு வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளதாக அறிவித்துள்ளார். படத்தில் சி எஸ் கே அணி விளையாடும் போட்டி ஒன்று படமாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்