கோட்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளை ரத்து செய்த திரையரங்குகள்.. என்ன காரணம்?

Mahendran

செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (14:26 IST)
தமிழ்நாட்டில் 'கோட்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளை 80 சதவீத திரையரங்குகள்  ரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
விஜய் நடித்த கோட்' திரைப்படத்தின் சிறப்பு காட்சி டிக்கெட் ஒன்றுக்கு ரூ.700 முதல் ரூ.800 வரை விநியோகஸ்தர்கள் கேட்பதாக தகவல் வெளியானது. விநியோகஸ்தர்களின் நெருக்கடியால் சிறப்பு காட்சிகளை திரையரங்கு உரிமையாளர்கள் ரத்து செய்ததாகவும், இதனால் சிறப்பு காட்சியை எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
 
விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் நாளை மறுநாள் அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருந்த நிலையில் தமிழகம் தவிர மற்ற பெண் மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படுகிறது. 
 
ஆனால் தமிழகத்தில் 4 மணி காட்சி திரையிட அனுமதி இல்லை என்ற போதிலும் 9 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த காட்சிக்கு 700  முதல் 800 ரூபாய் வரை தங்களுக்கு வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் இதன் காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் சிறப்பு காட்சியை ரத்து செய்து விட்டதாகவும் வழக்கமான நான்கு காட்சிகள் மட்டுமே திரையிட முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்