இயக்குனர் லீனா மணிமேகலைக்கு நீதிமன்றம் சம்மன்!

செவ்வாய், 12 ஜூலை 2022 (17:42 IST)
இந்துக்கடவுளை இழிவுபடுத்தியதற்காக லீனா மணிமேகலை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென நீதிபதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
 

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மணிமேகலை. இவர்  இயக்கத்தில் உருவாகியுள்ள காளி என்ற ஆவணப் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இதில், இந்துக் கடவுளை அவமதிக்கும் வகையில்,  போஸ்டர் இருப்பதாக கூறி பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து மத உணர்வுகளைபுண்படுத்தியதாகக் கூறி, லீனா மணிமேகலை மீது 153 A மற்றும் 295 A ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

டொரோண்டாவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகம் இந்திய தூதரகம்  அறிவுறுத்தலின்படி, காளி ஆவணப் படைப்பை நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அத்துடன், லீனா மணிமேகலை வெளியிட்ட காளி ஆவணப்பட போஸ்டர் சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

‘’காளி’’ என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் போபால் காவல்துறை லீனா ம்ணிமேகலைக்கு லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

மேலும், மணிமேகலைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்துக்கடவுளை இழிவுபடுத்தியதற்காக லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். இதைக்கேட்ட  நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென நீதிபதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்