விஜய் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய திரைப்படம் ‘கத்தி’. விவசாய மக்களின் பிரச்சினைகளை பேசும் படமாக 2014ம் ஆண்டு வெளியான கத்தி திரைப்படம் தன்னுடைய கதை என்று ராஜசேகர் என்பவர் மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
ராஜசேகர் தொடுத்த வழக்கில் லைகா நிறுவனம், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது புகார் பதியப்பட்டது. கடந்த 5 வருடங்களாக நடந்து வரும் இந்த விசாரணையில் கதை சம்பந்தமான பிரச்சினை என்பதால் இயக்குனர் முருகதாஸை தவிர நடிகர் விஜய் மற்றும் லைகா நிறுவனத்தை மதுரை நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது.