சமந்தாவின் ‘யசோதா’ படத்திற்கு திடீர் தடை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (12:26 IST)
நடிகை சமந்தா நடித்த ‘யசோதா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் இந்த படம் இரண்டு வாரங்களில் 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
வாடகை தாய் மையத்தில் நடக்கும் மோசடிகளை சமந்தா கண்டுபிடித்து எப்படி வெளியுலகுக்கு அம்பலப்படுத்துகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது 
 
உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மருத்துவமனை ஒன்றின் பெயர் தான் பிரச்சனையாக மாறியுள்ளது. இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள மருத்துவமனையின் பெயரில் நிஜமாகவே  ஐதராபாத்தில் ஒரு மருத்துவமனையை இருப்பதால், அந்த மருத்துவமனையின் சார்பில் யசோதா படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏற்கனவே திரை அரங்குகளில் இந்தப் படம் வெளியாகி விட்டதால் இந்தப் படத்தை ஓடிட்யில் வெளியிட டிசம்பர் 29 வரை தடை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்