கொரொனா ஊரடங்கால் ரூ.1 கோடி நஷ்டம்; பிரபல தயாரிப்பாளர் வருத்தம்

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (16:56 IST)
கொரொனா ஊரடங்கால் கபடதாரி படப்பிடிப்புக்கு ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கன்னடத்தில் வெற்றிப் பெற்ற படம் கவலுதாரி. இப்படத்தை அனைத்து மொழிகளில் ரீமேக் உரிமத்துக்கான போட்டி ஏற்பட்டது. இது தமிழ் மொழியில் சிபி சத்யராஜ், நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடிக்க பிரமாண்டாக உருவாகிவந்தநிலையில் கொரொனா தொற்று காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது கபடதாரியின்  படப்பிடிப்பு முடிந்துள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: சுமார் 200 நாட்களுக்குப் பிறகு கபடதாரிப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.  இடையே ஏற்பட்ட தாமதத்தா 1  கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
 மேலும் இப்படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமான முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்